கணேசன் ஜினேஷ்

மருந்தாளுனர்

20 வயது மருந்தாளரான கணேஷனைப் போன்ற முன்னணித் தொழிலாளர்கள், பொது மக்களுக்கு மருத்துவ அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதையும் வழங்குவதனையும் விட்டும் முடக்கி விட்டனர். அவர் வேலைக்குச் செல்வதை அவருடைய குடும்பத்தவர்களும் வருங்கால மனைவியும் ஏற்றுக் கொள்ள வில்லை என்றாலும், அவர் தனது சமூகத்தின் மீது தனக்கு சமூகப் பொறுப்புணர்வு இருப்பதாக தெளிவாக கூறினார். இந்த காலகட்டத்தில் ஒரு காசோலையை வீட்டிற்கு கொண்டு வருவதை விட அவரது வாழ்க்கை முக்கியமானது என அவரிடம் அவர்கள் கெஞ்சினர். முன்னெப்போதுமில்லாத வகையில் குறித்த சமூக நோக்கத்திற்காக வேண்டி அவர்களின் எச்சரிக்கை அழுகையினை ஓரங்கட்டினார். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சினைகள், ஒவ்வாமைகள் போன்ற நாட்பட்ட நிலைமைகளுக்கான மருந்துகளின் அவசரத்தன்மையை அவரது வாடிக்கையாளர்கள் அடிக்கடி அழைப்பின் மூலம் தெரிவித்து வந்தனர்.

“அவர்களுடைய வேண்டுகோளை நான் எவ்வாறு புறக்கணிக்க முடியும்” என அவர் வலியுறுத்தினார். அவர் வேலைக்குத் திரும்ப முடிவு செய்தவுடன், அவரது வருங்கால மனைவி மட்டுமே அவருக்கு உதவியாளராக செயற்பட்டார். ஏனென்றால் உதவியாளர்களினால் அவர்களின் குடும்பத்தவர்களின் துயரம் காரணமாக வேலை செய்ய முடியாமல் போனது.

ஒரு மாத ஊடரங்கு  காலப்பகுதியில், கோவிட் -19 நேர்மறை என சோதிக்கப்பட்ட முகக்கவச விநியோகத்தருடன் அவர் தொடர்பு வைத்திருந்தததாக உள்ளூர் ஓ.ஐ.சி யிடமிருந்து கணேஷனுக்கு அழைப்பு வந்தது. அவரது வீட்டை சுற்றி வளைத்த பொலிசார் அவரை அவரது மருந்தகத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் விற்பனைக்காக வைத்திருந்த முகக்கவசங்களை எடுத்து, அது ஆபத்தினை விளைவிக்க கூடும் என அவற்றை எரித்தனர். இதனால் அவர் ரூபா 40,000 யினை இழந்தார். கோவிட்-19 தோற்று சந்தேகநபராக கருதப்பட்டமையால் அவரது வீட்டில் இரண்டு வாரம் தனிமைப்படுத்தலில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆதரவற்ற மற்றும் குழப்பகரமான இந்த நேரத்தில், நோயை தங்கள் வீட்டு வாசற்கதவருகே கொண்டு வந்ததாக அயலவர்களினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். கணேஷன் கோவிட் -19 கு நேர்மறையாக சோதிக்கப்படவில்லை என்றாலும் அவரை அவமதிப்புடனேயே கருதினார்கள். அவருடைய ஒரே ஒரு ஆதரவு அவருக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை அவரது வீட்டு வாசலில் தந்துவிட்டு சென்ற அவரது நண்பர்கள் மட்டுமே.

முன்னணி தொழிலாளர்களினுடைய தியாகங்களும் போராட்டங்களும் பெரும்பாலும் கவனிக்கப்படாமலே போகின்றன. கணேஷனைப் பொறுத்தவரையில் இது தெளிவாகத் தெரிகிறது. அவருடைய தனிமைப்படுத்தல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டது. ஆகவே தான்  அவரைப்பற்றிய இந்த எதிர்மறையான கருத்துக்கள் நீண்ட காலம் நிலைத்திருக்கும். இது கோவிட்-19 பாதிக்கப்பட்ட மற்றும் சந்தேகத்திற்கிடமானவர்களுடன் தொடர்புடைய பழைமையான விபரிப்பு என்பதால் அவர் இதனை சகித்துக் கொள்ள வேண்டும்.

View in: English / සිංහල